Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

அலைந்து, திரிந்தும் அகப்படவில்லை மணப்பெண்..! நின்று போன எம்.எல்.ஏ., திருமணம்!

indiraprojects-large indiraprojects-mobile


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஈஸ்வரன். 43 வயதை கடந்த இவர் திருமணம் செய்ய முடிவு செய்து சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் பெரியார் நகர் காலனியில் வசிக்கும் ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்பவரை மணப்பெண்ணாக நிச்சயம் செய்து மணநாள் 12.09.18 என்றும் திருமணம் பண்னாரியம்மன் கோயிலில் என்றும் தலைமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் என பத்திரிகை அச்சடித்து கொடுத்து வந்தார்.

பெண் பார்க்க வந்த போதே எனக்கு இந்த எம்.எல்.ஏ., மாப்பிள்ளை பிடிக்கவில்லை என திருமணத்திற்கு மறுத்த சந்தியாவை அவரது குடும்பத்தினரும் எம்.எல்.ஏ.வான மணமகன் ஈஸ்வரனும் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். மணப்பெண் வசிக்கும் காலனி வீட்டுக்குச் செல்லும் சாலை மண் சாலையாக இருந்தது அதை ஒரே நாளில் கான்கிரீட் சாலையாக மாற்றினார் எம்.எல்.ஏ., ஈஸ்வரன். எதை கண்டும் அசராத மணமகள் சந்தியா கட்டாய திருமணத்தில் விருப்பம் இல்லையென வீட்டை விட்டே வெளியேறி தனது கல்லூரி தோழியின் மனப்பாறை வீட்டுக்குச் சென்றார்.
 

hurts


பிறகு குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தியாவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போலீஸ். அப்போது, என் அப்பா வயதுள்ளவரை திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை என்பதாலேயே நான் வீட்டை விட்டு வெளியேறினேன். கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் எனக்கு திருமணம் வேண்டாம் என வாக்குமூலம் கொடுத்தார் சந்தியா. நீதிபதியும் சந்தியாவின் பெற்றோர்களிடம் துன்புறுத்தக்கூடாது என எச்சரித்து சந்தியாவை அனுப்பி வைத்தார்.

இதன் பிறகு விரக்தியடைந்த மணமகனான எம்.எல்.ஏ.ஈஸ்வரன் எனக்கு பெண் கொடுக்க எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். திட்டமிட்டபடி அதே நாள் அதே இடம் தலைமை முதல்வர் தான் திருமணம் நடக்கும் என சபதமிட்டு தனது உறவினர்கள், நண்பர்கள், ஜோதிடர்கள், திருமண புரோக்கர்கள் என ஒரு பெரிய டீமையே களம் இறக்கினார். நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி என பல மாவட்டங்களில் பெண் தேடும் படலம் நடந்தது. அது மட்டுமில்லாது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை படிக்கும் தலித் பெண்கள், பணிபுரியும் மகளிர் என விபரங்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த பெண்களின் குடும்பத்தோடு தொடர்பு கொண்டு பெண் கேட்டார்கள் எம்.எல்.ஏவுக்காக களம் இறக்கிய குழுவினர்.
 

hurts


எம்.எல்.ஏ.ங்கறது அரசாங்க பதவி இல்லை. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பவருனு யாருக்கும் தெரியாது. அது மட்டுமில்லைங்க வயசாகிப் போச்சு. அப்பா வயசுனு ஏற்கனவே நிச்சயித்த பெண்னே சொல்லியிருச்சு.. என ஒவ்வொரு பெண் குடும்பத்திலிருந்தும் பதில் வந்துள்ளது. தனக்கு எப்படியும் ஏதோ ஒரு பெண் கிடைத்து விடுவாள் என நம்பிக்கையுடன் இருந்த எம்.எல்.ஏ., ஈஸ்வரன் திருமணம் முடிவு செய்யப்பட்ட பன்னாரியம்மன் கோயிலில் திருமண பந்தல் வரை போட்டு வைத்தார். 11ந் தேதி மாலை வரை அலைந்து, திரிந்தும் எந்தப் பெண்னும் மணமகளாக அகப்படவே இல்லை. வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக் கொண்ட எம்.எல்.ஏ. ஈஸ்வரன் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடியை தலைமை ஏற்க ஏற்பாடு செய்த அமைச்சர் பவானி கருப்பணனை தொடர்பு கொண்டு மணப்பெண் ஏதும் அமையலங்க கல்யாணத்தை நிறுத்தி விட்டேன் என தகவல் கொடுத்துள்ளார்.

நின்று போன திருமணத்தை அதே தேதியில் நடத்துவதாக எம்.எல்.ஏ., ஈஸ்வரன் முடிவு செய்திருக்க கூடாது. ஆர்ப்பாட்டம், ஆராவாரம் எதுவும் இல்லாமல் அமைதியாக தன் வயதிற்கேற்ற ஒரு பெண்னைப் பார்த்து சிக்கனமாக திருமணத்தை நடத்த வேண்டும் என தொகுதி ர.ர.க்கள் எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு ஆலோசனை கூறியுள்ளார்கள்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...