மாண்டஸ் புயலில் இடிந்து விழுந்த காவல்நிலையத்தின் மதில் சுவர்

wall of the police station that collapsed in the Mandus storm

மாண்டஸ் புயல் தமிழகத்தின் பல பகுதிகளில் பாதிப்பைஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில்மரங்களும், சுவர்களும் சரிந்து விழுந்துள்ளது. அந்த வகையில்வடசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்நிலைய மதில் சுவரானது புயலின்பலத்த காற்றால்இடிந்து விழுந்துள்ளது.

மீன்வளத்துறையின்கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இடத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தகாவல்நிலையம்மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று வீசிய புயலால்இந்த காவல்நிலையத்தின்மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. வழக்கமாக காவல்நிலையத்தில் வாகனங்கள் இந்தச் சுவருக்குஅருகில் நிறுத்தப்படும் நிலையில் நேற்று நல்வாய்ப்பாக எந்த வாகனங்களும் நிறுத்தப்படவில்லை.அதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ள நிலையில், மற்ற பகுதி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்நிலையத்தின் உள்ளே வரும் காவலர்கள் மட்டுமல்லாதுகாவல்நிலையத்தைக் கடந்து சாலை வழியாக செல்லக் கூடியவர்களும் ஒருவித அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.

rain
இதையும் படியுங்கள்
Subscribe