வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடலூர் மாவட்டத்தில் மழை விட்டுவிட்டு பொழிந்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக இன்று அதிகாலை வீட்டு சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

Advertisment

wall collapses incident in cuddlore...

கடலூர் கம்மியம்பேட்டையில் மாதாகோவில் எதிரில் வசிக்கும் நாராயணன்(50) மற்றும் அவரது சகோதரர் வேல்முருகன்(40), குடும்பத்தினர் நேற்று இரவு உறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பொழிந்த மழையினால் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் நாராயணனின் மனைவி மாலா(50), சுரேஷின் மனைவி மகேஸ்வரி(21), சுரேஷின் குழந்தை தனஷ்ஸ்ரீ(1) இவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நாராயணன் அவரது மகள் ரஞ்சிதா, சகோதரர் வேல்முருகன் ஆகிய மூவரும் அடிபட்டு கடலூர் அரசு பொதுமருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்துபோன மூவரின் உடல்கள் அரசு பொதுமருத்துவமனையில் சவ கிடங்கில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

மழையினால் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தை சார்ந்த மூவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.