The wall collapsed and the worker passes away

திருப்பூர் கொங்கு மெயின் ரோடுபகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா. இவர், தனக்கு சொந்தமான கட்டிடத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுவருகிறார். இந்த சீரமைப்பு பணிக்காக கோபிச்செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி, பிரவீன் ஆகியோரை வேலைக்கு வைத்துள்ளார்.

Advertisment

இவர்கள் இருவரும் இன்று அந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று பகல் பொழுதில் ராமமூர்த்தி மீது அந்தக் கட்டடத்தின் சுவார் இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிய ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரவீனுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த விபத்து குறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த திருப்பூர் வடக்கு போலீஸார், ராமமூர்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், பிரவீனை மீட்ட போலீஸார் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.