The wall collapsed and the priest was lose their life; Police investigation

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்கநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த மணி மகன் சரவணன் (53) கோயில் அர்ச்சகராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் இன்று வீட்டில் ஆல்ட்ரேஷன் ஒர்க் நடைபெற்று வந்தது. அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில்சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னர் இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமபோலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமகாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் அர்ச்சகரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.