Skip to main content

சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு!     

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

Wall collapse old lady passes away in thiruvarur

 

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் மக்கள் பல்வேறு சேதங்களை சந்தித்து வருகின்றனர். குடியிருப்புகளின் இடிபாடுகள், குடியிருப்புக்குள் மழை நீர், வயல் வெளியில் வெள்ளம் புகுந்து பயிர்கள் நாசமாவது என ஒரு புறமும், இடிபாடுகளில் சிக்கி மனித உயிர்கள் பலியாவதும், கால்நடைகள் பலியாவதும் நடந்து வருகின்றது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் சுவர் இடிந்து விழுந்து  மூதாட்டி ஒருவர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

வடகிழக்கு பருவ மழை துவங்கி, தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும், டெல்டா மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட சற்று அதிக அளவில் கொட்டித்தீர்த்து வருகிறது. மன்னார்குடி பகுதியிலும் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. 

 

கனமழையின் காரணமாக சுவர் இடிந்து மன்னார்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி சரசு என்பவர் உயிரிழந்தார். இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு மூதாட்டியின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். சுவர் இடிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

 

"ஆண்டு தவறாமல் மழையும், புயலும், வெள்ளமும் வருவதும், ஏழைகளின் குடிசைகளை பதம்பார்த்துவிட்டு போவதும் வாடிக்கையாகிவிட்டது. சேதமான குடிசையை சீரமைக்க வட்டிக்கு கடன்வாங்கி குடிசையை சீரமைப்பதற்குள் அடுத்த மழை வந்துவிடும். அதற்கு மீண்டும் கடனை வாங்கும் நிலையாகிடும். போதிய வேலையில்லாத சூழலில் இப்படி கடன்வாங்கி வாங்கி வாழ்விழந்து தவிக்கிற நிலையே தினக்கூலி ஆட்களின் தலைவிதியாகிவிட்டது. கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை உருவாக்கி குடிசையில்லாத நாடாக மாற்ற உத்தரவிட்டார். அவரது ஆட்சிகாலம் முடியும்வரை பல குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாறியது. பிறகு வந்த அதிமுக ஆட்சியில் அந்த திட்டத்தில் பல குளறுபடிகள் துவங்கி பாழாகிவிட்டது. அதே போல மோடி வீடு திட்டத்தில் அதிக ஊழல் நடந்ததும், அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதும் மன்னார்குடி தொகுதியில் தான் அதிகம்" என்கிறார் சமுக ஆர்வலரான சிவசந்திரன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.