தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் காமராஜ் நகர் பகுதியில் முருகையன் என்ற 90 வயது முதியவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. கட்டிலில் ஒரு ஓரமாக படுத்திருந்த முருகையன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.