Advertisment

ஜாமீனில் வெளியே வரும் வாளையார் மனோஜ்! 

Walayar Manoj out on bail!

Advertisment

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், திபு, சம்சீர் அலி, ஜித்தின்ஜாய், சதீசன், உதயகுமார், மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, பிஜின் ஆகிய 9 பேர் ஜாமீனில் உள்ளனர். மனோஜ் குன்னூர் சிறையில் உள்ளார். கடந்த ஜூலை மாதம் ஊட்டி நீதிமன்றம் மனோஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

அந்த நிபந்தனையில், வாளையார் மனோஜ் ஜாமீனுக்கு 2 நபர்கள் பிணை தர வேண்டும், ஊட்டியிலேயே குடியிருக்க வேண்டும், ரூ. 50,000 சொத்துக்கான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து ஊட்டி நீதிமன்றத்தில் மனோஜ் தரப்பு வழக்கறிஞர் முனிரத்னம் ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி மீண்டும் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜின் ரத்த உறவினர்கள் பிணை தரலாம் என்று நிபந்தனையில் தளர்வு அளித்து உத்தரவிட்டது. அதனை ஏற்று ஊட்டி நீதிமன்றத்தில் மனோஜின் மனைவி மற்றும் ஒருவர் ஆஜராகினர்.

Advertisment

மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் மனோஜுக்கு பிணை தருவதற்காக ரூ. 50 ஆயிரத்துக்கு சொத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்களை ஏற்றுகொண்ட நீதிமன்றம், வாளையார் மனோஜ் ஊட்டியில் தங்கியிருக்க வேண்டும். வாரந்தோறும் திங்கட்கிழமை ஊட்டி நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.

Walayar Manoj Kodanad Estate kodanadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe