Walaiyar Manoj files petition seeking cancellation of bail

கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கில் தனது ஜாமீனை ரத்துச் செய்து மீண்டும் சிறைக்கு அனுப்புமாறு உதகை நீதிமன்றத்தில் வாளையார் மனோஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது நபராகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் கேரளாவைச் சேர்ந்த வாளையார் மனோஜ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை பெற்றிருந்ந்தார். அதன்படி, உதகையில் தங்கியிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, வாளையார் மனோஜ் உதகையில் தங்கியிருந்து, காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

Advertisment

இந்த நிலையில், வாளையார் மனோஜ் உதகை நீதிமன்றத்தில் இன்று (02/02/2022) மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தான் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்றும், எந்த பணியும் இல்லாததால்வருமானம் இல்லை. தனக்கு தங்கும் வசதி, உணவுக்கு மிகவும் சிரமப்படுகிறேன். அதனால் தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும், என்னை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும்" என்றும் கோரியுள்ளார்.

வாளையார் மனோஜின் மனுவை நாளை (03/02/2022) விசாரிப்பதாக உதகை நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.