விழுப்புரம் மாவட்டம், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சவிதா பேருந்து நிறுத்தத்தில் ஒருமணி நேரமாக பேருந்துக்காகக் காத்திருந்துள்ளனர். ஆனால் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் எதுவும் நிற்காமல் சென்றுள்ளது. இந்நிலையில், அவ்வழியாக வந்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் கல்லூரி மாணவர்கள் நிற்பதைக் கண்டு என்னவென்று கேட்டறிந்தார்.

Advertisment

அதற்கு மாணவர்கள், “எந்த ஒரு அரசுபேருந்துகளும்நிற்கவில்லை. ஒருமணி நேரமாக நின்றுகொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு, அரசு போக்குவரத்து அதிகாரியிடம் உடனடியாக தொடர்புகொண்டு விழுப்புரம் சவிதா வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்தை நிறுத்தும்படி உத்தரவிட்டு, அவ்வழியாக வந்த ஒரு அரசு பேருந்தை நிறுத்தி, கல்லூரி மாணவர்களை அனுப்பிவைத்தார். அதையடுத்து, கல்லூரி மாணவர்கள் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றிதெரிவித்தார்கள்.