Advertisment

காத்திருந்த போலீஸ் படை!! தப்பிய உதய குமார்!

தேசிய அணுமின் கழகம் அணு உலைக் கழிவுகளை நெல்லை மாவட்டத்தின் கூடங்குளத்தில் இயங்கி வருகிற அணுமின் நிலைய வளாகத்தில் அமைப்பதற்கான ஏற்பாட்டினை செய்து வருகிறது. அது தொடர்பாக மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிற நிலையில், கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளரும், பச்சைத் தமிழகம் நிறுவனருமான சுப.உதயகுமாரின் தலைமையிலான அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

Advertisment

 Waiting Police Force !! Udaya Kumar  escaped!!

ரஷ்ய இந்திய கூட்டு முயற்சியால் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியுடன் கொண்ட இரண்டு அணுமின் உலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு மேலும் நான்கு அணு உலைக்கான அமைப்பு பணிகளும் நடந்தேறி வருகின்றன.

Advertisment

 Waiting Police Force !! Udaya Kumar  escaped!!

இந்தநிலையில், அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக போராட்டக் குழுவினரை ஒன்று திரட்டி கலெக்டர் அலுவலகம் செல்ல எதிர்ப்பு அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக. அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நெல்லை வருவதாக இருந்தது. அந்த ரகசிய தகவலால் உளவுப்பிரிவு மற்றும் போலீசார்கள் உதயகுமாரைக் கண்காணிக்க நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

 Waiting Police Force !! Udaya Kumar  escaped!!

இதனிடையே நாகர்கோவிலிலிருந்து கிளம்பிய சுப.உதயகுமார் நெல்லைக்கு பஸ் ஏறினார். பேருந்து நாங்குநேரி கடந்த பிறகு உதயகுமார் மாயமாகிவிட்டார்.

 Waiting Police Force !! Udaya Kumar  escaped!!

தான் கைது செய்யப்படலாம் என்ற தகவலால் அவர் மூன்றடைப்பு தாண்டி இறங்கியவர் காரில் சென்றுவிட்டதாக ஸோர்சுகள் தெரிவிக்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில், மதியம் மேல் வரை காத்திருந்த போலீசார் ஏமாற்றமடைந்தனர்.ஆனால் போலீஸ் தரப்பிலோ அது போன்ற திட்டமில்லை என்கிறார்கள்.

police koodangkulam rb udayakumar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe