Advertisment

விடிய விடிய மீட்புப்பணி... தேசிய பேரிடர் மீட்புப்படைக்காக காத்திருப்பு!

நாமக்கல் ஐஐடி குழுவினர் திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தைமீட்க எடுத்த முயற்சிகள் தொய்வுற்ற நிலையில் தற்போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisment

Waiting for National Disaster Rescue Force!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 26 அடியில்உட்கார்ந்த நிலையில் இருக்க, முதலில் மூச்சுத்திணறல் ஏற்படாமல்சுவாசக்க போதுமான ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. முதலில் ஜேசிபி இயந்திரங்களை வைத்து பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் விரைவில் மீட்கமதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் மற்றும் அவரது குழுவினர், தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் என அனைவரும் இந்த மீட்புப்பணியில் ஈடுப்பட்டனர். சம்பவ இடத்தில் மருத்துவக்குழுவும், மருத்துவ உபகாரணங்களும்தயார் நிலையில்வைக்கப்பட்டிருக்கிறது.

பிரத்யேக குழந்தை மீட்பு இயந்திரத்தை வைத்து குழந்தையை மீட்க தீயணைப்புதுறை மற்றும் மணிகண்டன் குழு முழு சிரத்தை எடுத்தது எனினும் சில பின்னடைவுகள் ஏற்பட்ட நிலையில் முயற்சியை கைவிடாமல் மீண்டும் ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பள்ளம் தோண்டி மீட்கமுயற்சி மேற்கொள்ளப்பட்டது.ஆனால் 15 அடிக்குமேல் பாறை இருந்தததால் அந்த பணியும் நிறுத்தப்பட்டது.அதேபோல் சுஜித்தும் 27 அடியில் இருந்து 68அடிக்குக்கும் கீழேசென்றான். அதனை அடுத்து ஐஐடியை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் ஒருபுதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தையை மீட்கமுடியும் என அந்த இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் இறங்கினர். ஆனால் அந்த குழுவின் முயற்சியும் தொய்வடைந்தது.

Advertisment

இந்நிலையில்விடிய விடிய தொடர்ந்து தீவிர மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் குழந்தை உள்ளே விழுந்து பதினொரு மணி நேரத்திற்குமேல் ஆகியதால் பெற்றோர்கள், உறவினர்கள் பதற்றத்தில் உள்ளனர். மதுரை கோவையில் இருந்து வந்த குழுக்களோடு ஐஐடி குழுவும் சேர்ந்து ஆலோசனை நடத்தியது.ஆனால் தற்போதுசென்னையில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் காலை 6.30 மணிக்கு நடுக்காட்டுபட்டிக்கு வந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தையின் சுவாசம் சீராக இருப்பதால் தொடர்ந்து ஆக்சிஜன்செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் அந்த ஐடி குழுவினர் கொண்டுவந்த கருவியின் விட்டமானதுபெரிதாக இருப்பதால் உள்ளே செலுத்துவதற்கும் முடியாமல் போனது. தற்போது அதன் விட்டத்தைக் குறைத்து மீண்டும் உள்ளே செலுத்துவதற்கான முயற்சிகளும் ஒருபுறம் நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த முழு மீட்பு பணியிலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்மற்றும் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் சிவராசுஆகியோர் உள்ளனர்

child national dogs welfare camp and treatment Rescue thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe