wait ... Suresh Chandra about 'valimai Update'!

'நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு, அஜித் - எச்.வினோத் இணையும் படம் 'வலிமை'. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா தொற்று பரவலால் தாமதமாகி, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.

Advertisment

சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு, ஹைதராபாத்தில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில், அஜித்தும் கலந்துகொண்டு நடித்து வந்தார். இந்தநிலையில், கடந்த வார படப்பிடிப்பின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு விபத்து நடப்பது, இது இரண்டாவது முறையாகும்.

Advertisment

வலிமை படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் அஜித்குமாரின் நண்பரும், அவரது மக்கள் தொடர்பு அலுவலருமான சுரேஷ் சந்திரா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'வணக்கம். வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு.. படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் அஜித் குமாரும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான போனிகபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து வலிமை அப்டேட்குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும். நன்றி!' எனத் தெரிவித்துள்ளார்.