வி.சம்பத்துக்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர்கள்!

s

இடைத்தேர்தல் வரும் ஜனவரி ஒன்றில் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்காக ஆளும்கட்சியாக உள்ள அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பு களமிறங்கி தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் பாலவேடு பழனியப்பனும், ஆர்.ஆர் முருகனும் டிடிவி பக்கம் உள்ளனர். அங்கு அதிமுக எம்எல்ஏ சீட் அன்பழகனின் பிஏவும், அரூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலாளராக உள்ள வி.சம்பத்துக்கு கிடைக்க போவதாக பேச்சுக்கள் அடிபட்டுவருகிறது.

வி.சம்பத்துக்கான தொகுதி வேலையை கேபி கருப்பண்ணன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஆத்தூர் எம். எல். ஏ ஆகியோர் பார்த்து வருகின்றனர். அவர்கள் அரூரில் உள்ள கிராமங்களுக்கு நேராக சென்று மக்களினுடைய குறைகளை கேட்டு அப்போதே தீர்த்து வைக்கின்றனர். குறிப்பாக ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கான உதவிகள், ஓய்வூதியம் வேண்டும் என்றால் இவர்கள் கைப்பணத்தையே போட்டு ஓய்வூதியம் கொடுப்பது போன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

v.sampath
இதையும் படியுங்கள்
Subscribe