Skip to main content

''வி.பி.சிங்கின் தந்தை வீடு தமிழ்நாடு'' - முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

"V.P. Singh's father's house is Tamil Nadu" - Chief Minister M. K. Stalin's resilience

 

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, (20.04.2023) சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

 

இதனையடுத்து முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலையை இன்று (27.11.2023) காலை 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜய சிங், அபய் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது.

 

தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்வில் மேடையில் தமிழக முதல்வர் பேசுகையில், ''வி.பி.சிங்குக்கு உத்தர பிரதேசம் தாய் வீடு என்றால் தமிழ்நாடு தான் தந்தை வீடு. தந்தை பெரியார் பெயரை உச்சரிக்காமல் அவர் பேச்சே இருக்காது. அதனால் தான் அப்படிப்பட்ட தந்தை பெரியாருடைய சமூக நீதி மண்ணில் வி.பி.சிங்குக்கு முதல் முதலாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. நானும் மரியாதைக்குரிய வி.பி.சிங்கும் இரண்டு முறை சந்தித்திருக்கிறோம். முதல் சந்திப்பு 1988 ஆம் ஆண்டு தேசிய முன்னணியின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. அப்பொழுது இளைஞர் அணி சார்பில் மாபெரும் ஊர்வலத்தை நான்தான் தலைமை தாங்கி நடத்தி வந்தேன். கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்கள் பங்கெடுத்த அந்த ஊர்வலத்தை இதே அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி, அன்றைக்கு ஆர்ட்ஸ் காலேஜ் என்று சொல்வார்கள். அந்த கல்லூரி பக்கத்தில் மேடை அமைத்து பேசினோம். மாலை தொடங்கி இரவு வரை மேடையில் இருந்தபடியே வியந்தபடி பார்த்து வாழ்த்தினார் வி.பி.சிங்.

 

அப்பொழுது நான் அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த சந்திப்பு அவர் பிரதமரானபோது டெல்லிக்குப் போன எம்.எல்.ஏ குழுவில் நானும் இருந்தேன். எல்லா கட்சி எம்.எல்.ஏக்கள் அந்த குழுவில் இருந்தார்கள். நானும் இடம் பெற்றிருந்தேன். அப்போது ஒவ்வொருத்தராக அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். என்னிடம் வந்த பொழுது என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னார் ''இவரை எப்படி மறக்க முடியும்' இவர் தான் சென்னையில் இளைஞர் படையை நடத்தினார்'' என்று மறக்காமல் பாராட்டினார். வி.பி.சிங்கின் அந்த பாராட்டு என் வாழ்நாளில் மறக்க முடியாதது. இன்று நான் முதலமைச்சராக பொறுப்பேற்று அவருக்கு சிலை திறந்து இருக்கிறேன் என்றால், இதைவிட என்ன பெருமை எனக்கு வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Ex-DMK MLA acquitted in case

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன். மெக்கானிக் தொழில் செய்து வந்த புவனேஸ்வரன் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மர்ம கும்பல் ஒன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நிலத்தகராறு தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் சையது இப்ராஹிம், செல்வம், முரளி உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் தூண்டுதலின் பேரில் தன்னுடைய மகன் கொலை செய்யப்பட்டதாகவும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் அவருடைய பெயர் இல்லை எனவே இதை ரத்துசெய்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என புவனேஸ்வரனின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கையில் முரண்பாடுகள் இருப்பதால் அதனை ரத்து செய்து சிபிஐ விசாரணை நடத்த 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் பிறகு முறையாக விசாரணை செய்யப்பட்டு திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், சையது இப்ராஹிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம் உள்ளிட்ட 12 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில் முன்னாள் எம்எல்ஏ உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நீதிபதி கே.ரவி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து'- நீதிமன்றம் தீர்ப்பு  

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
'Cancellation of the order releasing Minister I. Periyasamy'-Court verdict

வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை  விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.