தமிழகத்தில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்இன்று காலை முதல்வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

vote

அதேபோல் மக்களவைத்தேர்தலில் சில வாக்குச்சாவடிகளில் முறையாக வாக்குப்பதிவு நடைபெற வில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுஅறிவித்திருந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

தர்மபுரி-8 தேனி -2, திருவள்ளூர், ஈரோடு, கடலூரில்தலா ஒன்று என மொத்தம்13 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேனியில் 197 ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரம் பழுது சரி செய்யப்பட்டு வடுகப்பட்டி 197 வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.

Advertisment

தற்போது நடைபெற்று வரும் நான்கு தொகுதி இடைத் தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்பட்டு வருகிறது.