Voting for the Assembly elections has begun ... !! Actor Ajith was the first to vote!

Advertisment

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கயிருக்கும் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவையில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் வாக்குச்சாவடிக்கு அவரது மனைவி ஷாலினியுடன் வந்திருந்தார். கரோனா காலத்தில் தன்னை காண கூட்டம் கூடிய நிலையில் ரசிகர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆர்வத்தில் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயன்றதையும் தவிர்த்துக் கொண்டார் நடிகர் அஜித்.

வாக்குப்பதிவு சரியாக ஏழு மணிக்கு துவங்க இருக்கும் நிலையில் அதற்கு சில நிமிடத்திற்கு முன்பாகவே நடிகர் அஜித் அவரது வாக்கினை சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார்.