Advertisment

''வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்''-தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்!

'' Voters must be arranged to vote without fear '' - Chief Electoral Officer's instruction!

Advertisment

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தேர்தல் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும் என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி பழனிகுமார் அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்.

இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி பழனிகுமார் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் 'தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வேட்புமனு பரிசீலனை நடுநிலையுடன் நடைபெறுவதைக் கண்காணிக்க வேண்டும். வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்' என அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe