Published on 14/09/2021 | Edited on 14/09/2021

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், வரும் ஜனவரி 1ஆம் தேதி 18 வயது நிறைவடைபவர்கள் தங்களை வாக்காளராக பதிவு செய்துகொள்ளலாம். மேலும், வாக்காளர் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை இந்த முகாமில் கொடுத்து திருத்தம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்ப்பு முகாம் முழுவதும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் என்றும் தமிழ்நாடு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.