தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி, புகைப்படம் திருத்தம் செய்ய, பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 18- ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஏற்கனவே செப்டம்பர் 30- ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 15- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான, திருத்தம் செய்வதற்கான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீட்டிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.