Skip to main content

“ஜனவரி 25ஆம் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்” - திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு 

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

"Voter ID cards will be issued to new voters from January 25" - Trichy District Collector Sivarasu

 

“இரண்டாம் கட்ட சிறப்பு முகாமில் 15 ஆயிரம் புதிய வாக்காளர்களை எதிர்பார்க்கிறோம், ஜனவரி 25 ஆம் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்” என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

 

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்பாக திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சிவராசு, கடந்த மாதம் 16ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 தொகுதிகளுக்கான, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் முதற்கட்டமாக கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இந்த சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.  இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. 

 

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம். திருச்சி மாவட்டத்தில் இது வரை, 64 ஆயிரத்து 785 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 63 ஆயிரத்து 201 மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  61,018 படிவம் ஒப்புதல் பெறப்பட்டு,  58,123 படிவங்கள் ஏற்கப்பட்டுள்ளது. 2,895 படிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், 96% மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

 

திருச்சி மாநகரில், மன்னார்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்கு சாவடிகளை, சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளுக்கான மேற்பார்வையாளர் சஜன்சிங் சவான் நேரில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவராசு, திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


ஆய்வுக்குப் பின் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, “இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குச்சாவடிகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் உதவி செய்து வருகிறார்கள். அறிவிக்கப்பட்ட அத்தாட்சி நகல்கள் ஏதேனும் ஒன்று இருந்தால் மட்டுமே மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 

 

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 2020 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வாக்காளர் பட்டியலில் 72% வாக்காளர்கள் இருக்க வேண்டும். 71% வாக்காளர்கள் இருந்தால் நல்லது. என்றாலும், திருச்சி மாவட்டத்தில் 72% வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக உள்ளனர். 

 


திருச்சி மாவட்டத்தில் வாக்களர்கள் பட்டியலில் குளறுபடிகள் இல்லை. 90 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இருக்க வேண்டும். தற்போது, 45 ஆயிரம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 28 ஆயிரம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது நடைபெறும் இரண்டாம் கட்ட முகாமில் 15 ஆயிரம் புதிய வாக்காளர்களை எதிர்பார்க்கிறோம். இது நிறைவடைந்தால் புதிய வாக்காளர் பட்டியலில், 90% புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள்.


 
விண்ணப்ப படிவம் அளித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபின், வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்” என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.