/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/VOTER LIST45666.jpg)
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது.
வாக்காளர் சிறப்பு முகாமில் வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி உள்ளிட்டவற்றைத் திருத்தம் செய்துக் கொள்ளலாம். தமிழகம் முழுவதும் உள்ள அந்தந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கலாம். நவம்பர் 21, நவம்பர் 22 ஆகிய தேதிகளில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் 12.46 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து தமிழகம் முழுவதும் ஜனவரி 20- ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us