Advertisment

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்குப்பதிவு!

Vote in the tamilnadu Film Directors Association election!

Advertisment

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் இன்று காலை முதல் தொடங்கி தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

சென்னை கே.கே.நகரில் உள்ள அன்னை சத்யா பள்ளியில் இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இத்தேர்தலில் இயக்குநர் பாக்யராஜ் தலைமையில் ( இமயம் என்ற அணியும் ) ஒரு அணியும், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் (புது வசந்தம் என்ற அணியும்) ஒரு அணியும் போட்டியிடுகின்றன.

இத்தேர்தலில் மொத்தம் 1,883 பேர் வாக்களிக்க தகுதி உடைய நிலையில், அஞ்சல் மூலம் 106 பேர் வாக்களித்துள்ளனர். செந்தில்நதன் என்பவர் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர், செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர், இணைச்செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் இருபத்தியோரு பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. இயக்குநர் சங்கத்திற்காக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று மாலை 4 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

elections
இதையும் படியுங்கள்
Subscribe