Vomiting in 20 people who ate lunch

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மாரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் அரங்கநாதன்(28). இவருக்கு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேலிருப்பு கிராமத்தில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், பெண் வீட்டார் மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக நேற்று மாரங்கியூர் கிராமத்துக்கு வந்தனர். அப்போது பெண் வீட்டாரை உபசரிப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisment

மதியம் வந்திருந்த உறவினர்கள் அனைவருக்கும் விருந்து உணவு பரிமாறப்பட்டது. அந்த உணவு சாப்பிட்ட மாரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், சிவக்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் மற்றும் மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பெண் வீட்டார் 11 பேர் உட்பட சுமார் 20 பேர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அவர்கள் அனைவரையும் மீட்டு உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வாந்தி மயக்கத்திற்கான காரணம் என்னவென்று விசாரணை செய்து வருகிறார்கள்

Advertisment