/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tfyhtr.jpg)
வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் இன்று முதல் டிசம்பர் 16 வரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் இன்று மதுரையில் இருந்துபிரச்சாரத்தை துவங்குவதற்காக கமல்ஹாசன்மதுரை விமான நிலையத்திற்கு வருகைதந்தார்.
மதுரைக்கு வருகை தந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து மதுரையில்கமலஹாசனுக்கு மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் அவரது ரசிகர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.கடந்து செல்லும் பகுதிகளில் அவர் உரையாற்றவில்லை. பொதுமக்களையும், தொண்டர்களையும் பார்த்து கையசைத்து மட்டும் சென்றார்.
கரோனா ஊரடங்கு உத்தரவை மீறிஏதாவது ஒரு பகுதியில் கமலஹாசன் உரையாற்றினால் அவர் மீது கைது நடவடிக்கை இருக்கும். எனவே சட்டத்துக்கு உட்பட்டு நான் இந்த பிரச்சாரத்தை செய்வேன் என்று கமலஹாசன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)