Advertisment

சாலையோர மக்களின் பசியாற்றும் தன்னார்வலர்கள்..! (படங்கள்)

இந்தியா முழுவதும் கரோனாவின் தீவிரப் பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு இன்றுமுதல் (24.05.2021) ஒருவார காலத்திற்கு முழு ஊரடங்காக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் சாலையோரம் வசிக்கும் மக்கள், ஆதரவற்ற மக்கள் என பலரும் பாதிப்படையாமல் இருக்க பல தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர்.

Advertisment

மேலும், சென்னையைப் பொறுத்தவரையில் காலை, மாலை, இரவு என மூன்று வேலைகளும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்ற பலதரப்பட்டோர் மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி, அவர்களை பசியாறச் செய்துவருகின்றனர். அதேபோல் இன்று சென்னை ராயப்பேட்டை பீட்டர் சாலையில் உள்ள புது கல்லூரி சார்பில் சாலையோரம் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Advertisment

corona curfew lock down Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe