Advertisment

மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருவோருக்கு ஆக்சிஜன் அளிக்கும் தன்னார்வ அமைப்பு..! (படங்கள்)

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கரோனாஇரண்டாம் அலையின் பரவல் அதிகமாகியுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் பல இடங்களில் கரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று (06.05.2021) முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

பலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துவருகிற நிலையில், தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். அதேபோல் சர்வதேச ஜெயின் வர்த்தக அமைப்பு, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக, ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய 4 வாகனங்களை திருவல்லிகேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நிறுத்தியுள்ளது. தீவிர கரோனா தொற்றால் மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி கிடைக்கும்வரை, இந்த வாகனத்தில் உள்ள ஆக்சிஜனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

oxygen coronavirus case
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe