Advertisment

10 பழங்குடியின மாணவர்களின் முழு கல்வி செலவையும் ஏற்கும் தன்னார்வ அமைப்பு!

 voluntary organization that bears  entire educational expenses of 10 tribal students

Advertisment

ENSURE EDUCATION AND WELFARE TRUST மற்றும் Global Schools Growth Forum என்ற இரு தன்னார்வ அமைப்புகள் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

திருவள்ளூர் மெய்யூர் கிராமத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவர்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நலத்திட்ட உதவிகளைGlobal Schools Growth Forum மற்றும்ENSURE EDUCATION AND WELFARE TRUST என்ற அமைப்புகள்செய்து வருகிறது. வெம்பேடு கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல சுமார் 8 கி.மீ. நடக்க வேண்டி இருக்கிறது. அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் அந்த கிராமத்திற்கு இந்த அமைப்பு இலவசமாக ஆட்டோ ஒன்றை வழங்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் என்றும், பள்ளி இடைநிற்றலைத் தடுக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல், ஒரு பழங்குடிக் குக்கிராமத்தைச் சேர்ந்த 10 மாணவர்களின் முழு கல்வி செலவையும் Global Schools Growth Forum என்ற தன்னார்வ அமைப்பு ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசுப் பள்ளியில் படிக்கும் பட்டியல், பழங்குடியின மற்றும் பின் தங்கிய கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து அவர்களை அறிவில் சிறந்தவர்களாக உருவாக்குவதே எங்கள் நோக்கமாக என்றும், அதன் முதல் தொடக்கமாகவே 10 மாணவர்களின் கல்விக்கான முழு பொறுப்பையும் நாங்கள் ஏற்க இருக்கிறோம். அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதை எங்கள் பணியாக கருதுகிறோம் என்றும் தன்னார்வ அமைப்பின்நிறுவனர் லியோ ஆகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

education Organization students
இதையும் படியுங்கள்
Subscribe