Advertisment

'அனுமதியின்றி குரல், படங்களை பயன்படுத்த கூடாது'-நடிகர் ரஜினிகாந்த் தரப்பு அறிவுறுத்தல்

 'Voice, images should not be used without permission'-Actor Rajinikanth's instructions

Advertisment

'நடிகர் ரஜினிகாந்தின் பெயர், குரல், புகைப்படம் ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ரஜினிகாந்திற்கு இருக்கும் நற்பெயர், அவருடைய ஆளுமைக்கும் சேதம் ஏற்படுத்தும் விதமாக ரஜினிகாந்தின் பெயர், குரல், புகைப்படம், கேலிச்சித்திர படம் உள்ளிட்டவற்றை பல்வேறு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவது தங்களுடைய கவனத்திற்கு வந்துள்ளது. அவர் அங்கீகரிக்காமல் அவரது புகைப்படங்களை பயன்படுத்துவது மக்களிடம் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாகும். எனவே அனுமதியின்றி ரஜினிகாந்தின் படம், குரல் ஆகியவற்றை பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

politics rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe