அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு வி.கே. சசிகலா தீபாவளி வாழ்த்து!

கச

சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயலலிதா தோழி சசிகலா சில மாதங்களாக அமைதியாக இருந்த நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதிமுதல் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அதிமுக பொன்விழா ஆண்டில் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய அவர், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக தென் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த அவர், 29ஆம் தேதி தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். விரைவில் மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

hj

sasikala
இதையும் படியுங்கள்
Subscribe