சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாகவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது, அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது கடந்த 7ஆம் தேதி திருவேற்காட்டில் உள்ள தனியார்மண்டபத்தை சித்ராவின் வீட்டாரும், அவரது கணவரான ஹேம்நாத் வீட்டாரும்பார்வையிட்டபோது பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கான வரவேற்பு ஏற்பாடுகளுக்காகஇருவீட்டாரும் சேர்ந்துதான்,திருமண மண்டபத்தைப் பார்வையிடச் சென்றதாக ஹேம்நாத்தின் தந்தை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். மேலும்,தங்களை மட்டுமேவிசாரிப்பதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்நிலையில், மண்டபத்தைப் பார்க்கச் சென்றபோது திருமணமண்டபத்தில்வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தகாட்சிகள், தற்போது ஹேமநாத்தரப்பால்கொடுக்கப்பட்டுள்ளது.அந்த காட்சியில்திருமண மண்டப நிர்வாகத்தினரிடம் அவர்கள் பேசுவது மற்றும் அரங்குகளைக் கூட்டிச்சென்று காண்பிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.