vizhupuram student passes away due to electric shock

Advertisment

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கும் வட நெற்குணம் கிராமம் கிராமத்தை சேர்ந்த காண்டீபன் எனவரது மகன் சங்கர் 21 வயதான இவர் ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். தற்போது கரோனா காரணமாக கல்லூரி விடுமுறை என்பதால் தற்போது சேனனூரில் உள்ள ஒரு தனியார் கிரஷர் கம்பெனியில் புல்டோசர் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார்.

நேற்று வழக்கம்போல் கிரஷர் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். வேலை செய்து கொண்டிருக்கும்போது இடையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதியில் எம் சாண்டல் குவியலாக கொட்டப்பட்டுள்ளமறைவான இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த கம்பி மீது இவர் தலை உரசி, இதனால் இவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தா என தெரிகிறது.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். தகவலறிந்து பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். போலீசார் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்கு முயன்றனர்அப்போது, சங்கரின் உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லக்கூடாது, அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறி முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணை செய்து உரிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி போராட்டம் செய்த சங்கரின் உறவினர்களிடம் போலீசார் எடுத்துக் கூறினர். அதன் பின்னர் சங்கர் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி படிக்கும் மாணவன் கிரசர் கம்பெனிக்குள் மின்சாரம் தாக்கிதான் இறந்தாரா என்பது மர்மமாக உள்ளது என்றும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் போலீஸ் விசாரணையின் மூலம் உண்மை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்கள் இறந்துபோன சங்கரின் உறவினர்கள்.