தனியார் லாட்ஜில் இளைஞர் தற்கொலை...!

vizhupuram private hotel incident police investigation

விழுப்புரம் டவுன் மேற்கு காவல் நிலையத்திற்கு நேற்று இரவு, அப்பகுதியில் இருக்கும் லாட்ஜ் ஒன்றிலிருந்து ஃபோன் செய்து, தங்களது விடுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக காவல்துறையினர் அந்த விடுதிக்கு விரைந்து சென்றனர். பின் போலீஸ் விசாரணையில் அங்கு தற்கொலை செய்து கொண்டவர் மதுரையை சேர்ந்த 38 வயது நாராயணன் என்பதும் அவர் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இவர் கடந்த 28ஆம் தேதி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வேலை காரணமாக விழுப்புரம் வந்தவர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

அங்கிருந்து அவர், அந்தநிறுவனம் சம்மந்தமான பணிகளை செய்து வந்துள்ளார். இதனிடையே நேற்று இரவு விடுதியில் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவலைத்தான் விடுதி உரிமையாளர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார்.

போலீசார் இறந்துபோன நாராயணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாராயணன் தற்கொலை செய்துகொண்ட அறையிலிருந்த கடிதம் ஒன்றை போலீசார் எடுத்துள்ளனர். அந்தகடிதத்தில் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. அந்த விரக்தியின் காரணமாகதற்கொலை செய்துகொள்ளபோகிறேன். என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என அதில் நாராயண எழுதியிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe