சிவாஜி காலத்தில் காதல் உணர்வு! விஜய் சொல்லும்போது மந்திரசக்தி! -விவேக் விளக்கம்!

1960-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி கணேசன் - வைஜெயந்தி மாலா நடித்த இரும்புத்திரை திரைப்படத்தின் 'நெஞ்சில் குடியிருக்கும்' என்று தொடங்கும் அருமையான பாடலை பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் கிண்டலடித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டன அறிக்கை வெளியிட்டது சிவாஜி சமூக நலப்பேரவை.

Vivek Explanation!

இதற்கு நடிகர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்திருக்கும் விளக்கம் இது -

Vivek Explanation!

1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க. இந்த விளக்கத்தை சிவாஜி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் சரிதான்!

actor bigil tamil vivek
இதையும் படியுங்கள்
Subscribe