Viswanathan Anand

Advertisment

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தமிழகத்தைச் சேர்ந்தவரும் 5 முறை செஸ் சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு சென்னையில் நடைபெற்றது. சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக ஆர்காடி ட்வார்கோவிச் 2ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், துணைத்தலைவராக தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.