Skip to main content

சர்ச்சையான பாரதிதாசன் பல்கலைகழக விசிட்?! மறுத்த ஆளுநரின் தனி செயலாளர்... ரத்தான கூட்டம்!

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்களில் வேந்தராக இருக்கும் ஆளுநரின் செயலாளர் ராஜாகோபால் இன்று தீடீர் என பாரதிதாசன் பல்கலைகழகத்திற்கு நிர்வாக ரீதியான சந்திப்பு நடப்பதாக செய்துள்ள அறிவிப்பு பெரிய சர்ச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை மறுத்துள்ளார் ராஜகோபால். 

 

 Controversial  University Visiting.. The secretary of the governor who refused

 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் நேற்று அனுப்பிய சரக்குலர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில் ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் 29.08.2019 நமது பல்கலை கழகத்தில் நடைபெறும் சிறப்பு கூட்டத்திற்கு வர இருப்பதால் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் அழகான ஆடை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதுதான். பதிவாளரின் அந்த சர்க்குலர் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுகுறித்து பல்கலைகழ பேராசிரியர்கள் சிலரிடம் பேசிய போது.. 

இதற்கு முன்பு இப்படி ஒரு நடைமுறை இருந்ததில்லை ஆளுநரின் செயலாளர் என்பது உதவியாளர் என்கிற அந்தஸ்துதான் அவர் வேண்டுமானால் தனியாக துணைவேந்தர் சந்திப்பு நடத்தியிருக்கலாம் ஆனால் மாறாக ஆளுநரின் செயளாலருக்காக இப்படி ஒரு சந்திப்பு நடத்துவது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

 

Bharathidasan University

 

நீண்ட நாட்களாக தற்காலிக ஊழியர்களாக இருந்த 60 பேரை நிரந்தர பணியாளராக நாளை நியமித்து இருக்கிறார்கள். அதேபோன்று கடந்த ஜீலை மாதம் உதவி பேராசிரியர் - 26 பேர், இணை பேராசிரியர் 14 பேர், பேராசிரியர் 14 பேர் என 54 பணியிடங்கள் நிரப்படுவதற்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 9ம் தேதியோடு விண்ணப்பிக்கும் கெடு முடிந்த நிலையில் தற்போது விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்படும் நிலையில் இந்த ஆளுநர் செயலாளர் சந்திப்பு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். பேராசிரியர்கள்.

இந்நிலையில் ஆய்விற்கு செல்லவில்லை என ஆளுநரின் தனி செயலாளர் ராஜகோபால் தனியார் சேனல் ஒன்றிற்கு விளக்கமளித்துள்ளார். அதேபோல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடக்கவிருந்த ஆலோசனை கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்கூட்டத்திற்கு ஆளுநரின் தனி செயலாளர் செல்வது தமக்கு தெரியாது என ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சரும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாரதிதாசன் பல்கலை. நுழைவுத் தேர்வில் தொழில் நுட்பக்கோளாறு; மாணவர்கள் அவதி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Ph.D Online Entrance Test conducted by Bharathidasan University Technical disorder

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024 ஆவது கல்வி ஆண்டுக்கான முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 57 வகையான பாடப்பிரிவுகளில் 1092 மாணவ, மாணவியர் தேர்வுக்கு ரூ.2,000 முதல் ரூ. 2,100 வரை கட்டணமும் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் புகல் 12.15 மணி வரை நுழைவு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தேர்வாளர்களுக்கு தேர்வெழுத பிரத்யேக லாகின் ஐடி(ID) மற்றும் ரகசிய குறீயீடு உள்ளிட்டவைகளும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து நுழைவு தேர்வு எழுத மாணவ,மாணவியர் பல்கலைக்கழக இணையதள முகவரியில் லாக் இன் செய்தனர். ஆனால் பல்கலைக்கழக இணையதளம் செயல்படவில்லை. இதனால் ஏராளமான மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத முடியாமல் அவதிக்குள்ளாகினர். 

பின்னர் தொடர்ந்து பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை. இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சீனிவாச ராகவன் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியவில்லை. மேலும் இதில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பணம் செலுத்தாமல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். மறு தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

Next Story

'அமைச்சர் வரும் நாளில் கூட சுத்தம் செய்ய மாட்டீர்களா? - கடுகடுத்த அமைச்சர்

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
 'You will not clean even on the day the minister comes?'-said the minister

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலத்தில் அரசு ஐடிஐ அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது ஐடிஐ முதல்வர் சித்ராவிடம் இந்த ஐடிஐ எப்போது தொடங்கப்பட்டது?, எவ்வளவு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து ஆய்வுக்காக ஒவ்வொரு பணிமனையாக செல்ல முயன்ற போது ஐடிஐயின் தொடக்கப் பகுதியிலேயே குப்பை கூளங்கள் நிறைந்து காணப்பட்டது.

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த அமைச்சர் சி.வி கணேசன் இப்படித்தான் ஐடிஐ வைத்திருப்பீர்களா? அமைச்சர் வரும் நாளில் கூட சுத்தம் செய்ய மாட்டீர்களா என்று கேட்டார். அதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி ஆட்கள் பற்றாக்குறையால் இதுபோன்று இருப்பதாக தெரிவித்தார். அதற்கு அமைச்சர் சி.வி கணேசன் இதற்கு எல்லாம் ஐடிஐ முதல்வர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். தினமும் ஐடிஐ வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து திடீரென அங்கிருந்த கழிவறைக்குள் சென்று பார்த்து அதிர்ச்சியானார். இப்படி சுத்தமில்லாமல் இருக்கிறதே என்று தெரிவித்தார். பின்னர் ஒவ்வொரு பணிமனையாக சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினர். பயிற்றுநர்கள் பாடம் எடுப்பதை மாணவர்களுடன் அமர்ந்து கவனித்தார்.

தரமான பயிற்சியை கொடுத்து இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும் என்றார். மேலும் மாணவர்கள் சிலரிடம் ஐடிஐ படித்தால் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது என்று தெரியுமா என்றும் கேட்டறிந்தார். ஒவ்வொரு பணிமனையாக சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் சி .வி கணேசன் ஆய்வு செய்தார். ஆய்வை தொடர்ந்து ஐடிஐ முதல்வர் மற்றும் அலுவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.