Skip to main content

குடியரசுத் தலைவர் வருகை; கோவையில் போக்குவரத்து மாற்றம்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

Visit of the President; Traffic change in Coimbatore

 

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு கோவையில் இன்றும் நாளையும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘வரும் 18.02.2023 & 19.02.2023 - ஆம் தேதிகளில் குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் சிறியளவில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 18.02.2023 மதியம் 01.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை. 19.02.2023 காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரை அவிநாசியிலிருந்து கோவை நகருக்குள் நீலாம்பூர், சின்னியம்பாளையம் வழியாக வரும் கனரக/சரக்கு வாகனங்கள் தடை செய்யப்படுகிறது. மாற்றாக, கோவை நகருக்குள் வரும் கனரக/சரக்கு வாகனங்கள் L&T பைபாஸ் ரோடு, சிந்தாமணிப்புதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம்.

 

அதேபோல், கோவை நகரிலிருந்து அவிநாசிக்கு செல்லும் கனரக/சரக்கு வாகனங்கள் அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர், L&T பைபாஸ் ரோடு வழியாகச் செல்லலாம். கோவையில் இருந்து காளப்பட்டி ரோடு வழியாக நகருக்கு வெளியே செல்லும் கனரக/சரக்கு வாகனங்கள் விமான நிலைய சந்திப்பை அடைய தடை செய்யப்படுகிறது. மாற்றாக காளப்பட்டி நால்ரோடு, மயிலம்பட்டி, தொட்டிபாளையம் வழியாகச் செல்லலாம். கோவையில் இருந்து சத்திரோடு, சரவணம்பட்டி பகுதிகளிலிருந்து அவிநாசி சாலை / திருச்சி சாலைக்கு செல்லும் கனரக/சரக்கு வாகனங்கள் கணபதி, காந்திபுரம் மேம்பாலம், அண்ணாசிலை, ரேஸ்  ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாகச் செல்லலாம். 

 

கோவையிலிருந்து மருதமலை ரோடு, தடாகம் ரோடு வழியாக வரும் வாகனங்கள் கௌலிபிரவுன் ரோடு, சிந்தாமணி வழியாகச் செல்வது தடை செய்யப்படுகிறது. மாற்றாக, GCT, பாரதி பார்க் சாலை, வடகோவை மேம்பாலம், காந்திபுரம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாகச் செல்லலாம். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலம், காந்திபுரம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாகச் செல்லலாம். கார் போன்ற இதர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், கோவை நகருக்குள் அவினாசி சாலை, பழைய மேம்பாலம், கூட் ஷெட் ரோடு, புரூக்பீல்டு ரோடு, சிந்தாமணி சந்திப்பு, கெளலிபிரவுன் ரோடு, லாலிரோடு மற்றும் மருதமலை ரோடு ஆகிய பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நேரங்களில் செல்ல வேண்டியிருந்தால் தங்களது பயணத்தை மாற்றி திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

அவிநாசி சாலை, சின்னியம்பாளையம் வழியாக கோவை நகருக்குள் வரும் கார்/இதர வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவு, மயிலம்பட்டி, காளப்பட்டி நால்ரோடு, சரவணம்பட்டி வழியாகச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விமான நிலையம், ரயில்நிலையம், மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே தொட்டிபாளையம் பிரிவிலிருந்து நகருக்குள் அனுமதிக்கப்படும். 

 

திருச்சி சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவினாசி சாலையை தவிர்த்து, சிங்காநல்லூர் வழியாக தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். அவிநாசி ரோடு, பழைய மேம்பாலத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மேற்குறிப்பிட்ட நேரங்களில் மேம்பாலத்தின் கீழே செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மருதமலை ரோடு, தடாகம் ரோடு - வழியாக வரும் வாகனங்கள் GCT, பாரதி பார்க் சாலை, வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாகச் செல்லலாம். மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப ஏற்ப பயணத்தை திட்டமிட்ட கேட்டுக் கொள்ளப்படுகிறது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்