Advertisment

உளவுத்துறையை மிரட்டிய விஷ்வ ஹிந்து பரிஷத் - வெளியான ஆதாரம்  !

prt

Advertisment

மத்திய உள்துறையின் கீழ் பல்வேறு உளவு துறை அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. நாட்டை அச்சுறுத்தும் சக்திகளை கண்டறிந்து அவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வது உளவுத்துறை அமைப்புகளின் வேலையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்(முன்னாள் தலைவர்) பிரவின் தொகாடியா உளவுத்துறை இயக்குனருக்கு விஎச்பி உறுப்பினர்களை வேவு பார்ப்பதாகவும், அவர்களின் தகவல்களை மிரட்டி வாங்குவதாகவும், இத்தகைய நடவடிக்கை அவசர நிலையை நினைவு படுத்துவதாக இருப்பதாக கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதம் அனுப்ப பட்டதாக செய்தி வெளியான 8 மாதங்களுக்கு பின்னர் மத்திய உளவுத்துறை தங்களுக்கு கீழ் இருக்க கூடிய அதிகாரிகளுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் குறித்த விசாரணையை மிக கவனமாகவும் , யாருக்கும் தெரியாமல் விசாரிக்குமாறும் உத்தரவு சென்று இருக்கின்றன.

rr

'இந்த நிலையில் வி.எச்.பி தலைவர் பிரவின் தொகாடியா மத்திய உளவுத்துறை இயக்குனருக்கு எழுதிய கடிதம் வெளியாகி இருக்கிறது. ஜூன் 29, 2017 என்று தேதி குறிப்பிட்ட 2 பக்க கடிதத்தில், " விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை மகாராஷ்டிரா, ஹரியானா, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள உறுப்பினர்களை அழைத்து பதில் அளிக்க முடியாத கேள்விகள், உன்னத பணிகள் செய்து வருவது குறித்து விசாரிக்க பட்டு இருக்கிறது. நாட்டை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்க உளவுத்துறை தொடர்ந்து வேலை செய்து வருகிறது. உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறோம். உளவுத்துறை வி.எச்.பி நபர்களை அழைத்து இந்திய ஹெல்த் லைன் மற்றும் இந்து உதவி மையம் எப்படி வேலை செய்கிறது, அதில் வேலை செய்ய கூடியவர்கள் தகவல்கள் தரும் படி கேட்டு இருக்கிறார்கள். இது குறித்து நேரடியாக அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு கேட்டு இருந்தால் நானே தகவல்களை கொடுத்து இருப்பேன். ஆனால் அதை செய்யாமல் உளவுத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பெயரில் விஎச்பி நேரடியாக சென்று விசாரணை செய்ய உத்தரவு விட்டு இருப்பது என்பது நாட்டில் நெருக்கடி நிலையை உணர்த்துவதாக இருக்கிறது. இந்த இரண்டு உதவி மையங்கள் ஏழை மக்களின் மருத்துவ உதவிகளுக்காக பணியாற்றி வருகிறது. நாட்டில் பல்வேறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். வேலை இல்லாமல் பலர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இதை உளவுத்துறை விசாரித்து தடுக்க வேண்டும். நாட்டின் எல்லை பகுதிகளில் பல இந்திய ராணுவ வீரர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அதை உளவுத்துறை கண்டுபிடித்து தடுக்க வேண்டும். தீவிரவாத அமைப்புகளில் பலர் சேர்ந்து வருகிறார்கள் அதை தடுக்காமல் இருக்கிறது.

Advertisment

r1

இந்த விசாரணைக்கு உத்தரவிட உளவு துறை இணை ஆணையர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மீது தேச விரோத விசாரணைக்கு உத்தரவிட்டது குறித்து உடனடியாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த இரண்டு பக்க கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

நாட்டில் நடக்க கூடிய பல்வேறு விஷயங்களை கண்காணிப்பதே அரசின் உளவுத்துறையின் வேலையாகும் . இந்த நிலையில் தங்களை விசாரிக்கக்கூடாது அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட அதிகாரி மன்னிப்பு கோரா வேண்டும். அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மிரட்டும் தொனியில் உளவுத்துறைக்கு கடிதம் எழுதி இருப்பது அம்பலம் ஆகி இருக்கிறது.

praveen togadia
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe