திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பெங்களூருவுக்கு ராட்சத வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஒரே கல்லாலான பிரம்மாண்டமான விஷ்ணு சிலை இடித்ததால் விழுப்புரம் வெள்ளிமேடுபேட்டை பகுதியில் வீடுகள் மற்றும் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அந்த சிலையை கொண்டு வந்த வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

Collide

Collide

Collide

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கோரக்கோட்டை என்னும் கிராமத்தில் இருந்து பெங்களூர்விஆர் புறத்திற்கு66 அடி நீளம் 26 அடி அகலம் கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டைபகுதி வழியாக சிலையை கொண்டு சென்ற பொழுது சிலை இடித்ததில்சில வீடுகளும், மின்சாரக் கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனையடுத்து வாகனத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.