Advertisment

கண்ணம்மா ஜோதி கலைச்செல்விக்கு விசா தர இங்கிலாந்து அரசு மறுப்பு: உதவிய கனிமொழி

கண்ணம்மா... கண்ணம்மா... அழகு பூஞ்சிலை..! இந்தப் பாடலை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. விஜய்சேதுபதி நடித்த றெக்க படத்தில் இடம் பெற்றப் பாடல் இது. பார்வை குறைபாடு கொண்ட இளம் பாடகி ஜோதி கலைச்செல்வி என்பவர் இப்பாடலை பாடியிருக்கிறார். அதே போல பார்வை குறைபாடுள்ள பாடகர் பிரேம். இவர்கள் இருவரையும் லண்டனில் நடக்கும் ஒரு இசை நிகழ்ச்சிக்காக தேவசித்தம் சாரிடபிள் என்கிற தனியார் நிறுவனம் அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்திருந்தது.

Advertisment

singer-jothi-kalaiselvi

ஆனால், இளம் பாடகர்கள் இருவருக்குமுள்ள பார்வை குறைபாட்டினை சுட்டிக்காட்டி அவர்களுக்கு விசா மறுத்துள்ளது இங்கிலாந்து அரசு.இதனையறிந்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக இதில் தலையிட்டு இந்த பார்வையற்ற இரு இளம் கலைஞர்களும் இங்கிலாந்துக்கு சென்று அவர்கள் பங்கேற்கத் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உதவ வேண்டும்" என்றுகேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisment

 jaishankar - Kanimozhi - Sushma Swaraj

கனிமொழியின் இந்தட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. கனிமொழி எம்பியாக பதவியேற்று 4 நாட்கள்தான் ஆகிறது. அதன் பிறகு, அவர் மத்திய அரசுக்கு வைத்துள்ள முதல் கோரிக்கை இது. அதாவதுகடந்த காலங்களில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு ஏதேனும் இன்னல்கள் ஏற்பட்டால் உடனடியாக களத்தில் இறங்கும் கனிமொழி, அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனத்துக்கு எடுத்துச் சென்று, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். சுஸ்மா சுவராஜும், கனிமொழியின் கோரிக்கை மீது உடனடி கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.

singer-jothi-kalaiselvi

அதே போல, தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. கனிமொழியின் கோரிக்கையை அறிந்த அமைச்சர் ஜெய்சங்கர், உடனடியாக டெல்லியிலிருக்கும் இங்கிலாந்து அரசின் தூதரகத்தை தொடர்புகொண்டு பேச, பார்வை குறைபாடுள்ள இளம் பாடகர்களுக்கு உடனடியாக விசா தர சம்மதித்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களுக்கு விசாவும் கிடைத்திருக்கிறது. விசா கிடைத்த மகிழ்ச்சியை கனிமொழிக்கு நன்றி தெரிவித்தனர் அந்த இளம் பாடகர்கள்.

kanimozhi singer jothi kalaiselvi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe