Skip to main content

காய் நகர்த்தும் ப.சிதம்பரம்! பிரேமலதா தீவிரம்! ராஜேந்திரபாலாஜிக்கு சாதகம்!

Published on 12/03/2019 | Edited on 12/03/2019



திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது என்று பேசப்படும் நிலையில், டெல்லியில் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் ப.சிதம்பரம் என்று கொளுத்திப் போடுகிறார்கள் கதர்ச்சட்டையினர். 

 

p


காங்கிரஸ் மேலிடத்திடம் ப.சிதம்பரம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், 17-வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடக்கூடிய காங்கிரஸ் வேட்பாளர்கள், தனிப்பட்ட முறையிலும் மக்களிடம்  செல்வாக்கு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். ப.சிதம்பரம் இப்படிச் சொல்வதன் பின்னணியில், அவருக்குச் சாதகமான சில விஷயங்கள் இருக்கின்றன.  அவை என்னவென்றால், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது காங்கிரஸ். அப்போது  காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக சிவகங்கையில் கார்த்தி சிதம்பரமும், விருதுநகரில் மாணிக்கம் தாகூரும் போட்டியிட்டனர்.

 

சிவகங்கையில் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவைவிட வாக்குகள் குறைவாகப் பெற்று  நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தாலும்,  கார்த்தி சிதம்பரத்தால்  1,04,678 வாக்குகளைப் பெற முடிந்தது. விருதுநகரில் மாணிக்கம் தாகூர் பெற்ற வாக்குகளோ 38,482 ஆகும். அதனால்தான், பாராளுமன்ற தொகுதியில் குறைந்தபட்சம் 1 லட்சம் வாக்குகளைப் பெற்று தங்களின் செல்வாக்கை நிரூபித்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்தத் தடவை வாய்ப்பளிக்க வேண்டும் என்று லாபி செய்கிறார் ப.சிதம்பரம். 

 

s

 

சிவகங்கையில் ப.சிதம்பரத்துக்கு எதிர் அரசியல் பண்ணுபவர் முன்னாள் மத்திய அமைச்சர்  சுதர்சன நாச்சியப்பன். இவருடைய மகன் ஜெயசிம்மன், சோனியா காந்தியின் உதவியாளர் ஜார்ஜின் உறவுக்காரப் பெண்ணைக் காதலித்து மணந்தவர். அதனால், சோனியாவிடம் சுதர்சன நாச்சியப்பனுக்கு செல்வாக்கு உண்டு. இவருடைய அண்ணன் பகீரத நாச்சியப்பனின் மகன்தான் மாணிக்கம் தாகூர்,  ராகுலின் நட்பு வட்டத்தில் இருப்பதாலேயே, இவருக்கு விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து சீட் தரப்படுகிறது. 2009-ல் வைகோவை வென்று எம்.பியும் ஆகியிருக்கிறார் மாணிக்கம் தாகூர். எந்தச் சூழ்நிலையிலும், சுதர்சன நாச்சியப்பனின் கை ஓங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, மாணிக்கம் தாகூருக்கு விருதுநகரில் சீட் தந்துவிடக் கூடாது என்று காய் நகர்த்துகிறார் ப.சிதம்பரம். ஆனாலும், ராகுலின் ஆசி பெற்றவர் மாணிக்கம் தாகூர் என்பதால், ப.சிதம்பரத்தின் பாட்சா பலிக்காது என்கிறார்கள் அக்கட்சியினர். 

 

p


2009 பாராளுமன்ற தேர்தலில்  தனித்தே நின்றது தேமுதிக.   அப்போது,  விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்டு 1,25,229 வாக்குகளைப் பெற்றார் மாஃபா பாண்டியராஜன். நாயக்கர் சமுதாய வாக்குகள் கணிசமாக உள்ள இத்தொகுதி தங்களுக்குச் சாதகமானது என்று நினைக்கும் தேமுதிக தலைமை, விருதுநகரை அதிமுகவிடம் கேட்டுப் பெற்று, பிரேமலதாவைக் களமிறக்கும் திட்டத்தில் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும் இத்தொகுதி மீது கண் பதித்திருக்கிறார்.

 

kt

 

ரவீந்திரநாத் குமார்,  விருதுநகர் தொகுதியின் எம்.பி. ஆகிவிட்டால், விருதுநகர் அதிமுக மா.செ.வும் மந்திரியுமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அரசியலில் தனி ஆவர்த்தனம் செய்துவருவதை நிறுத்திவிடலாம் என்பது, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கணக்காக உள்ளது. ஆனாலும்,  மேடைக்கு மேடை முதல்வர் புகழ் பாடிவரும் தனக்கு எந்தவிதத்திலும் இடையூறு வராமல் எடப்பாடி பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இருக்கிறது. அதனால், தேமுதிகவுக்கு இத்தொகுதியை விட்டுக்கொடுப்பதுதான் தனக்குப் பாதுகாப்பானது என்று நினைக்கிறாராம் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இதன்மூலம்,  விருதுநகர் தொகுதியின் தேமுதிக வேட்பாளராக பிரேமலதா அறிவிக்கப்படலாம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; ஒருவர் கைது!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
sattur Fireworks Factory incident One person involved

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று (17.02.2024) வழக்கம் போல பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தன. இத்தகைய சூழலில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த சமயம் சுமார் 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் என்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள விக்னேஷ், ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

Next Story

“முதல்வர் சீரியசாக ஏதும் செய்தால் மத்திய அரசின் நடவடிக்கையும் சீரியசாக இருக்கும்” - ஹெச். ராஜா

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
H.Raja says If the Chief Minister does something seriously, the action of the Central Government will also be serious

2014 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. அதன் பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இதற்காக விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 31 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பாஜக கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி இன்று (10-02-24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என யாராவது சொன்னால், அந்த அரசாங்கம் இந்திய சட்டப்படி நடத்தப்படவில்லை என பொருள்.

இந்திய அரசியல் சட்டப்படி நடக்கவில்லை எனில் என்ன நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்பது ஸ்டாலினுக்கு தெரியும். ஏனெனில் 1976ல் அவரது அப்பா நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார். குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சீரியசாக ஏதும் செய்தால் மத்திய அரசின் நடவடிக்கைகளும் சீரியசாக இருக்கும்” என்று கூறினார்.