viruthunagar oil factory incident police

Advertisment

விருதுநகர் பாண்டியன் நகரில் அப்பண்ணசாமி என்பவர் கோகிலா எண்ணெய் ஆலை நடத்தி வருகிறார். இங்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் போன்ற எண்ணெய்ப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மே 21- ஆம் தேதி மாலை, இந்த ஆலையைவழக்கம்போல் அடைத்துவிட்டுச் சென்றனர். அன்றிரவு 09.00 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் இயந்திரங்கள் உள்ளிட்ட சுமார் ரூபாய் 1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்தன. விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஆகிய ஊர்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, தீயணைப்பு பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அது எண்ணெய் ஆலையாக இருப்பதால், தீயை அவ்வளவு சீக்கிரம் அணைக்க முடியாமல், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.