விருதுநகர் மக்களவைத் தொகுதியின் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஆர்.அழகர்சாமி. மதுரை பழங்காநத்தத்தில் வசிக்கும் அழகர்சாமி (வயது 47) 27 மனை தெலுங்குச்செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர், திருப்பரங்குன்றத்தில் கழிவு பஞ்சு வியாபாரம் பார்த்து வருகிறார். கோயம்புத்தூரில் இயங்கும் கைட்ஸ் இன்போசர்வீஸ் பிரைவேட் லிமிடெட்டில் பங்குதாரராகவும் இருக்கிறார். இவருக்கு மூன்று மகன்கள்.

Advertisment

a

1987-ல் விஜயகாந்த் ரசிகர் மன்ற கிளை துணை செயலாளராக இருந்திருக்கிறார். தேமுதிக கட்சி ஆரம்பித்ததும், அக்கட்சியின் திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் ஆனார். மாநகர் கழக துணை செயலாளர், மாநகர் கழக பொருளாளர், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர், மாவட்ட கழக பொருளாளர், கன்னியாகுமரி மாவட்ட கழக பொறுப்பாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் என படிப்படியாக அக்கட்சியில் பொறுப்புக்களை ஏற்று, தற்போது கழக விசாரணைக்குழு உறுப்பினராக இருக்கிறார்.

a

Advertisment

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 5 சதவீத வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த அழகர்சாமியை, மெகா கூட்டணி மீது நம்பிக்கை வைத்து, துணிச்சலாகக் களமிறக்கியிருக்கிறது தேமுதிக. தொகுதியில் மெஜாரிட்டியாக உள்ள சாதியைச் சேர்ந்தவரை நிறுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று கணக்குப் பார்த்துச் செயல்படும் கட்சிகளுக்கு மத்தியில், வேட்பாளர் தேர்வில் தேமுதிக எடுத்திருக்கும் முடிவு வரவேற்கக்கூடியதே! அதேநேரத்தில், மெஜாரிட்டி அல்லாத பிற சமுதாய வாக்குகளை அழகர்சாமியால் மட்டுமே கவர முடியும் என, வேறொரு புதுக்கணக்கைக் குஷியாகச் சொல்கின்றனர் தேமுதிகவினர்.