/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus3_3.jpg)
விருதுநகர் அருகே தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், பனையூர் அருகே இயங்கி வரும் தனியார் பஞ்சாலைக்கு சொந்தமான மினி பேருந்தில் 15- க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஆலைக்கு அழைத்து வந்துக்கொண்டிருந்த போது, நரிக்குடி அருகே பனையூர் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு திருச்சுழியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)