விருத்தாச்சலத்தில் இரவோடு இரவாக அத்துமீறி கட்டப்பட்ட அ.ம.மு.க கட்சி கொடி கம்பத்தை அகற்றிய அதிகாரிகள்!  

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பாலக்கரை ரவுண்டானா அருகில் அம்பேத்கார் சிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறுவதால் அப்பகுதியில் எந்த கட்சியினுடைய கொடிக்கம்பமும் அமைக்கக் கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.

ttv

இந்நிலையில் இன்று டிடிவி தினகரன் விருத்தாசலத்திற்கு வருவதால், நேற்று இரவோடு இரவாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கட்சியினர், கட்சி கொடி கம்பத்தை செங்கற்களால் கட்டினர்.

இதனை அறிந்த அதிமுக, தி.மு.க, பாமக, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, உடனடியாக கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று கூறினார்.

t

இதனால் அனைத்து கட்சியினருக்கு இடையே மிகப் பெரிய அளவில் பிரச்சினை வரும் என்பதாலும், அவ்விடத்தில் எவ்வித கட்சி கொடிக்கம்பம் வைக்க கூடாது என்று உத்தரவு இருப்பதினால், காவல் துறை அதிகாரிகளின் துணையோடு நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதனால் அவ்விடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொடிக்கம்பத்தை அகற்றிய பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

ttv.dinakaran viruthachalam
இதையும் படியுங்கள்
Subscribe