Advertisment

  அரசு மதுபானக் கடையில் 1.57 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு! 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை நெடுஞ்சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் விற்பனை முடிந்ததும், நேற்றிரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு விற்பனையாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் கடை திறப்பதற்காக விற்பனையாளர் வந்தபோது, கடைகளின் கதவு உடைக் கப்பட்டு இருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Advertisment

t

பின்னர் தங்களின் உயர் அதிகாரிகளுக்கும், விருத்தாச்சலம் காவல் துறை யினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 1.57 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

TASMAC viruthachalam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe