கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த கல்குனம் பகுதியைச் சேர்ந்த மாயவேல் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் விருத்தாசலத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் நெய்வேலி நோக்கி குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அரசக்குழி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் மாயவேல்(45) மற்றும் அவருடைய மகன் தமிழ் மாறன் (10) இருவரும் சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தலையில் அடிபட்டு காயமடைந்து உயிர் தப்பிய மாயவேல் மனைவி பரமேஸ்வரி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து ஊமங்களம் போலிசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)