Skip to main content

நான் அரசுக்கு எதிராக செயல்படவில்லை - விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன்

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

 

இடைத்தேர்தல் முடிவுகள்  ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிராக போனால் ஆட்சியை தக்க வைப்பதற்காக அதிருப்தி  அதிமுக எம்.எல்ஏக்களை தகுதி நீக்கும்  தற்காப்பு நடவடிக்கையை அ.தி.முக அரசு கையிலெடுத்துள்ளது. 

 

k

 

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான விருத்தாசலம் கலைச்செல்வன்,  அறந்தாங்கி இரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3  பேரை தகுதி நீக்கம் செய்ய  இன்று  சபாநாயகர் தனபாலுடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆலோசனை செய்தனர்.  3 எம்எல்ஏக்கள் மீதும்  உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவை தலைவர் தனபாலிடம் கொறடா ராஜேந்திரன் மனு அளித்துள்ளார்.  டிடிவி தினகரனோடு மூவரும் இருக்கும் புகைப்பட ஆதாரங்களையும் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன், " நான் அரசுக்கு ஆதரவாகத் தான் செயல்பட்டுக் கொண்டு வருகிறேன். அரசுக்கு எதிராக செயல்படவில்லை.  நான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர் கூட இல்லை" என கூறியுள்ளார்.

 

கலைச்செல்வன் அ.ம.மு.கவின் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்