தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என களத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கரோனாபாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விருத்தாசலம் வட்டாட்சியர் கரோனாவால் உயிரிழந்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த, விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசுசிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.