Skip to main content

குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை  பொதுமக்கள் முற்றுகை!    

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வடக்கு பெரியார் நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக போதிய குடிநீர் வசதி இல்லாததால் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள்  முறையிட்டனர்.

e

 

 நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

e


பின்னர் நகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சார்ந்த செய்திகள்

Next Story

மேய்ச்சலுக்காக சென்ற 7 ஆடுகளை விஷம் வைத்து கொன்றவருக்கு வலைவீச்சு!

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

person who poisoned to  7 sheep that went for grazing... police investigation

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவரின் மகன் பன்னீர்செல்வம். கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு சொந்தமாக பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன.

 

இந்நிலையில் பன்னீர்செல்வம் வழக்கம்போல் ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்வெளி பகுதிக்கு கொண்டு சென்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதே ஊரை சேர்ந்த ராமானுஜம்  மகன் பாலமுருகன் என்பவரின் வயல் பகுதிக்கு ஆடுகள் சென்றதாக கூறப்படுகிறது. வயலுக்குச் சென்ற ஆடுகள் பல மணி நேரமாக வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பன்னீர்செல்வம் மேய்ச்சலுக்கு செல்லும் பகுதிக்கு சென்று பார்த்தபோது பாலமுருகனின் வயலில் 5 ஆடுகள் இறந்து கிடப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதேபோல் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் என்பவரின் இரண்டு ஆடுகளும் இறந்து கிடந்தன.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 

முதற்கட்ட விசாரணையில் பாலமுருகன் என்பவரது வயலில், ஆடுகள் இறந்து கிடப்பதால், அவரை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  ஆடுகள் எவ்வாறு இறந்தது என்றும்,  கொடிய விஷத்தை கலந்து கொடுத்து ஆடுகளை கொன்றார்களா? அல்லது முன்விரோத பகையின் காரணமாக கொன்றார்களா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், உயிரிழந்த ஆடுகளை கால்நடை மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர். மேய்ச்சலுக்காக சென்ற, ஆட்டை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

 

Next Story

''மே 2 ஆம் தேதி நீங்கள் பார்ப்பீர்கள்...'' -மனுத்தாக்கலுக்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த் பேட்டி! 

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

Premalatha Vijayakanth petitions in the constituency won by Vijayakanth

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் தேர்தல் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல் என இயங்கி வருகிறது.

 

Premalatha Vijayakanth filed nomination in virudachalam constituency

 

வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. அதன்படி 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் 2006இல் விஜயகாந்த் தனித்து நின்று வென்ற விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட தற்போது மனுதாக்கல் செய்துள்ளார். இன்று (18.03.2021) பிரேமலதா விஜயகாந்தின் 52வது பிறந்தநாள் என்ற நிலையில், பிறந்தநாள் அன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ''கிராமங்கள் வரை கிளை கழகங்கள் அமைந்துள்ள கட்சி தேமுதிக. 243 தொகுதிகளிலும் தேமுதிக பலமாக உள்ளது'' என்றார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் உங்கள் பரப்புரையில் கூட்டம் அதிகம் கூடவில்லையே தேமுதிகவுக்கு எழுச்சி இல்லையா என கேள்வியெழுப்ப, ''மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவில் நீங்கள் பார்ப்பீர்கள்'' என்றார்.